ஆப்நகரம்

Bigil Vijay Song: வெறித்தனமாக டிரெண்டாகும் #Verithanam ; ரஹ்மான் இசையில் தளபதி குரல்

நடிகர் விஜய் நடித்துவரும் பிகில் திரைப்படத்திற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையில் முதன் முறையாக நடிகர் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாடவுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும் #Verithanam ஹேஷ்டேக் சில விநாடிகளில் தேசிய அளவில் முதலிடத்தில் டிரெண்டானது.

Samayam Tamil 8 Jul 2019, 6:24 pm
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஏர்ஆர் ரஹ்மான் இசையில் தயாராகி வரும் திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வந்த போதே பெரிய அளவில் டிரெண்டானது.
Samayam Tamil வெறித்தனமாக டிரெண்டாகும் Verithanam


இந்நிலையில் இன்று காலை இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இந்த திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்று வரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சரியாக மாலை 6 மணிக்கு ஏஆர்ரஹ்மான் இசையில் பிகில் திரைப்படத்திற்காக நடிகர் விஜய் வெறித்தனம் என ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு வெளியாகி சில விநாடிகளிலேயே #BigilSurpriseUpdate, #Verithanam என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களில் டிரெண்டாகிவிட்டது. அதில் வரும் சில பதிவுகளை கீழே காணுங்கள்






அடுத்த செய்தி