ஆப்நகரம்

ராகுலை பார்த்து பயப்படும் மோடி? அன்றே கணித்தார் குஷ்பு! மோடி, பாஜகவுக்கு எதிராக குஷ்புவின் டாப் 10 ட்வீட்டுகள்!

பாஜக தலைவரும், நடிகையுமான குஷ்பு சில ஆண்டுகளுக்கு முன்பு மோடி என்று பெயர் வைத்தவர்கள் அனைவரும் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள் என்று பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. குஷ்புவை எப்போது கைது செய்யப்போகிறீர்கள் என்று கூறி பலரும் அவரின் பழைய பதிவுகளை எடுத்து பதிவு செய்து வருகின்றனர். இதுதான் தற்போது இணையத்தில் வைரல்.

Samayam Tamil 25 Mar 2023, 1:48 pm

அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா என்று பொதுவாக சொல்வதுண்டு. ஆனால், நம்ம ஊர் அரசியல்வாதிகள் அடிக்கடி அதை நிரூபித்து வருகின்றனர். அரசியலில் முக்கியமாக கட்சி கட்சி விட்டு கட்சி மாறுவது வழக்கமாக நடக்க கூடிய ஒன்றுதான். அப்படி சில வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் நடிகை குஷ்பு.

சமீப காலமாக பாஜகவில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக தற்போது ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரிய அரசியல் பழிவாங்களாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை குஷ்பு 2019ம் ஆண்டில் பிரதமர் மோடி ராகுல் காந்தியை பார்த்து பயப்படுகிறார் என்று பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

Samayam Tamil actress and bjp leader khushbu old tweets against modi gone viral on internet
ராகுலை பார்த்து பயப்படும் மோடி? அன்றே கணித்தார் குஷ்பு! மோடி, பாஜகவுக்கு எதிராக குஷ்புவின் டாப் 10 ட்வீட்டுகள்!

அது மட்டுமின்றி எப்படி மோடி என்ற பெயர் வைத்துள்ளவர்கள் அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள் என்று பதிவு ஒன்றையும் சில வருடங்களுக்கு முன்பு பதிவு செய்துள்ளார். தற்போது அந்த பதிவையும் பகிர்ந்து இவர் மீது எப்போது அவதூறு வழக்கு போடப்போகிறீர்கள் என்று பலரும் பதிவு செய்து வருகின்றனர்.
"எதை பார்த்து பயப்படுகிறார் மோடி? எது அவருக்கு தூக்கமில்லா இரவுகளை தருகிறது? தினமும் அவரை பயமுறுத்தும் கெட்ட கனவு என்ன?எது அவரை தடுக்கிறது? எது அவரின் முதுகெலும்பை நடுங்க செய்கிறது? அந்த ஒரே விஷயம் ராகுல் காந்தி என்ற பெயர். மோடி செய்த தவறுகளை ராகுல் மட்டுமே சரி செய்ய முடியும் என்பதால் அவரை பார்த்து பதட்டமாகிறார்" என்ற ட்வீட்டை தற்போது பதிவிட்டு அன்றே கணித்தார் குஷ்பு என பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். அப்படி பாஜகவில் இணைவதற்கு முன்பு குஷ்பு அவர்கள் பிரதமர் மோடி மற்றும் பாஜக பற்றி பதிவிட்ட சில பதிவுகளை காணலாம்.



மோடி என்று பெயர் உள்ளவர்கள்!

மோடி என்ற பெயர் உள்ளவர்கள் அனைவரும் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள் என்று குஷ்பு பதிவிட்ட பதிவை தற்போது பகிர்ந்து இவர் மீது எப்போது வழக்கு போடப் போகிறீர்கள் என்று கேட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

மனிதரே இல்லை!

2019ம் ஆண்டு மோடி அவர்கள் ராஜீவ் காந்தி குறித்து பேசிய சர்ச்சை உரையை பதிவிட்டு நீங்கள் ஒரு மனிதரே இல்லை என்று பதிவிட்டுள்ள குஷ்பு அவர்கள்.

தமிழ்நாட்டில் தாமரை மலராதே!

தமிழ்நாட்டுக்குள் ஒவ்வொரு முறை மோடி வர முயற்சிக்கும்போதும் தமிழ்நாட்டின் மக்கள் மோடியை எதிர்க்கிறார்கள். உங்களால் ஒரு போதும் தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.

மூளை இல்லாதவரின் பக்தர்!

மோடி அவர்களின் தொண்டர் ஒருவரை விமர்சனம் செய்யும்போது மூளை இல்லாத மோடி பக்தர் என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சர்வாதிகாரி!

யாரெல்லாம் சரியாக தங்கள் கடமையை செய்கிறார்களோ அவர்களை இந்த சர்வாதிகார அரசு பழிவாங்கும் என்று குஷ்பு கூறியுள்ளார்.

வயதான பிரதமர்!

எதிர்பாராத விதமாக நமது நாட்டின் பிரதமராகியுள்ள மோடி என்ற பேர் கொண்ட நபர் வயது ஏறுவதால் அல்லது அதிகாரங்களை இழந்து விடுவோம் என்ற பயத்தில் இப்படியெல்லாம் செய்து வருகிறார் என்று ஜம்மு&காஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார் குஷ்பு.

மோடி அரசின் பொய்கள்

கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு போகவே குஜராத் புலம்பெயர் பணம் கொடுக்க வேண்டியிருந்த சூழலை சுட்டிக்காட்டி,மோடி அரசின் பொய்கள் தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.

நாட்டை அழிப்பவர்!

பிரதமர் மோடிக்கு இந்தியாவை அழிப்பது மட்டுமே முக்கியமான கொள்கை என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நாடு அனைவருக்குமானது!

சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து மோடி அல்லது ஷா போன்ற எந்த தேசத்துரோகிகளாலும் இதை மாற்ற முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

நிஜத்தை மறைக்கும் மோடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்த பொது ஏழை மக்களின் குடியிருப்புகளை சுவர் வைத்து மறைத்ததை விமர்சித்து மோடி உண்மையை மறைக்கிறார் என்று எழுதியுள்ளார்.

அடுத்த செய்தி