ஆப்நகரம்

Madhumitha Suicide Attempt : மதுமிதா பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி...! என்ன காரணம்?

பிக்பாஸ் வீட்டில் காமெடி நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக தகவல்க உறுதியாகியுள்ளது.

Samayam Tamil 17 Aug 2019, 6:04 pm
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட் மிகப் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. நேற்று ஒளிபரப்பான எபிசோடில் ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிந்து சண்டை போடத் துவங்கினர். இதில் ஆண்கள் அணியில் லோஸ்லியாவும், பெண்கள் அணியில் சேரனும் சேர்ந்துகொண்டனர். இருஅணிகளும் பிரிந்து சண்டைபோட்டனர்.
Samayam Tamil மதுமிதா பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி


பின்னர் நடந்த அடுத்த தலைவருக்கான டாஸ்கில் மதுமிதா அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்குள் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.


டுவிட்டரில் பலர் இது குறித்துப் பேசி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன் இப்படியாக முகின் , வனிதாவை அடித்ததாகத் தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது வெளியான புரோமோவில் மதுமிதா வீட்டில் கையில் கட்டுடன் வந்து கமலிடம் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ வெளியானது. அதன் மூலம் அவர் தற்கொலைக்கு முயன்றது உறுதியாகியுள்ளது.

அடுத்த செய்தி