ஆப்நகரம்

இந்திய அளவில் டிரெண்டான #gobackrahul, #gobackpappu, #VanakkamRahulGandhi சபாஷ் சரியான போட்டி...!

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போதும் #GobackModi என்ற ஹேஸ்டேக் டிரெண்டான நிலையில் தற்போது காங்., தலைவர் ராகுல் தமிழகம் வரும் போது #gobackrahul, #gobackpappu ஆகிய ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

Samayam Tamil 13 Mar 2019, 11:02 am
பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போதும் #GobackModi என்ற ஹேஸ்டேக் இந்தியா அளவில் சில நேரம் உலக அளவில் கூட மோடி மற்றும் பா.ஜ., எதிர்பாளர்களால் டுவிட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது.
Samayam Tamil இந்திய அளவில் டிரெண்டான gobackrahul gobackpappu


மோடி பல முறை தமிழகத்திற்கு வந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் இது டிரெண்ட் செய்யப்பட்டது. அவ்வப்போது பா.ஜ., ஆதரவளாளர்கள் #TNwelcomesModi என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்ய முயற்சி செய்தனர்.
Read More: வேலையே செய்ய வேண்டாம் மாதம் ரூ 1.62 லட்சம் சம்பளம் தரும் கம்பெனி..! நீங்கள் விண்ணப்பிக்க வேண்டுமா?

இந்நிலையில் தற்போது காங்., தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வரவிருக்கிறார். தற்போது காங்., எதிர்பாளர்கள், மற்றும் பா.ஜ., ஆதரவாளர்கள் #gobackrahul, #gobackpappu ஆகிய ஹேஷ் டேக்களை டிரெண்ட் செய்ய துவங்கி விட்டனர். தற்போது இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் முதலிடத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
Read More: பொள்ளாச்சி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையா?

அதே நேரத்தில் காங்., ஆதரவாளர்கள் #VanakkamRahulGandhi என்ற ஹேஸ்டேக்கையும் டிரெண்ட் செய்துவருகின்றனர்.

இது மட்டும்மல்ல தமிழகம் வரும் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை, டில்லி, கொல்கத்தா, ஐதராபாத், உள்ளிட்ட நகரங்களிலும் #gobackrahul என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அடுத்த செய்தி