ஆப்நகரம்

கம்யூனிசமும், பெரியாரிசமும் தெரிஞ்ச உங்களுக்கு கரணிசமும், விமலிசமும் தெரியுமா?

ட்விட்டரில் கரணிசம் மற்றும் விமலிசம் ஆகிய வார்த்தைகள் டிரெண்டாகி வருகிறது. இது குறித்த முழு விபரங்களை கீழே முழுமையாக படியுங்கள்

Samayam Tamil 26 Feb 2020, 12:47 pm
ட்விட்டரில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் ரசிகர்கள் மோதிக்கொள்வதைப் பார்த்திருப்போம். நேரம் போகவில்லை என்றால் ஏதாவது ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்டாக்கி விடுவார்கள் அஜித் விஜய் ரசிகர்கள், சிலர் ட்விட்டரில் அஜித் விஜய் சண்டை போடுவதற்காகவே கூட டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர்.
Samayam Tamil karan vimal


இவர்களுக்கு மத்தியில் ட்விட்டரில் வெறும் பேரைக் கொண்டு இரண்டு நடிகர்களின் ரசிகர்களின் ஐடிகள் மிகவும் பிரபலமாகி வருகிறது ஒரு ஐடி தம்பி வெட்டோத்தி மற்றொன்று வெறிபுடிச்ச விமலியன்ஸ்

தமிழ் சினிமாவில் மிகச் சாதாரணமாக நடிகர்களாக இவர்கள் இருவரும் அதிகமான படங்களில் நடித்துள்ளனர் இந்நிலையில் இந்த இரண்டு ஐடியும் இவர்கள் பெயரில் செயல்பட்டு இவர்களைப் பாராட்டு விதமாக ஓட்டுவதை அதாவது வஞ்சக புகழ்ச்சி அணியில் பதிவுகள் வெளியிடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக கரண் பேன் பேஜில் அவர்களுக்கு ப்ளூ டிக் கிடைக்காது என்பதால் அவர்களே தங்கள் டிபியில் ப்ளூ டிக் வைத்துள்ளனர்.

Also Read : ஒரே நாள் இரவில் 1700 பேரை கொன்று பலி வாங்கிய ஏரி

உங்களுக்கு நேரம் போகவில்லையென்றால் இந்த இரண்டு ஐடிக்குள்ளும் சென்று அதில் உள்ள பதிவுகளைப் பார்த்தாலோ போதும் நேரம் போவதே தெரியாத அளவில் விழுந்து விழுந்து சிரிக்கும் கண்டெண்ட்கள் இருக்கும். அஜித், விஜய் ரசிகர்கள் கூட இந்த ட்விட்டர் பக்கங்களுக்கு ரசிகர்களாகிவிட்டனர்.

அவர்களது ட்விக்கணக்கின் பெயர் அதற்கு அவர்கள் வைத்துள்ள இன்ட்ரோ டிஸ்கிரிப்ஷன், மேலும் அவர்கள் வசிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஊரின் பெயர் என எல்லாமே வேற நிலையில் சந்தித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் இருவரது ஐடியில் வெளியான பதிவுகளில் சில பதிவுகளைக் கீழே காணலாம் வாருங்கள்.







அடுத்த செய்தி