ஆப்நகரம்

PM Modi: 1988ல் பிரதமர் மோடியின் இமெயில் ஐடி என்ன தெரியுமா?

சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரதமர் மோடி பாலகோட் தாக்குதலுக்கு தான் தான் ஐடியா கொடுத்தாகவும் மேகங்களுக்கு நடுவே விமானம் சென்றால் ரேடாரில்தெரியாமல் தப்பிக்கலாம் எனவும் கூறியிருந்தார்.

Samayam Tamil 14 May 2019, 2:38 pm
சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரதமர் மோடி பாலகோட் தாக்குதலுக்கு தான் தான் ஐடியா கொடுத்தாகவும் மேகங்களுக்கு நடுவே விமானம் சென்றால் ரேடாரில்தெரியாமல் தப்பிக்கலாம் எனவும் கூறியிருந்தார்.
Samayam Tamil 1988ல் பிரதமர் மோடியின் இமெயில் ஐடி என்ன தெரியுமா


அந்த விவகாரம் பெரும் கேலி, கிண்டலுக்கு உள்ளான நிலையில் தற்போது பிரதமர் மோடி தான் 1987-88களில் டிஜிட்டல் கேமராக்களையும், இன்டர்நெட்டையும் பயன்படுத்தியதாகவும், டிஜிட்டல் கேமராவை கொண்டு அத்வானியை புகைப்படம் எடுத்ததாக தெரிவித்தார்.

ஆனால் உண்மையில் டிஜிட்டல் கேமராக்கள் கடந்த 1995ம் ஆண்டுதான் விற்பனைக்கு வந்தது. அதே போல 1995ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தான் இந்தியாவில் இன்டர்நெட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனால் இவரது பேச்சு பல மீம்ஸ்களையும் கருத்துகளையும் உருவாக்கியுள்ளது தற்போது அது வைரலாக்கி வருகிறது அதில் சிலவற்றை கீழே காணலாம்.









இதில் குத்து படத்தில் நடித்த நடிகையும் தற்போதைய அரசியல்வாதியுமான ரம்யா செய்த டுவிட் இருக்கிறது கவனத்தீர்களா? இதில் அவர் பிரதமர் மோடி 1988ல் என்ன என்ன இமெயில் ஐடி வைத்திருப்பார் என கேள்வி எழுப்பி அதற்கு அவரது யூகம் dud@lol.com என குறிப்பிட்டுள்ளார். உங்களது யூகம் என்ன? கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

அடுத்த செய்தி