ஆப்நகரம்

துப்பாக்கி சுடும் போட்டியில் "தல" அஜித் ; டுவிட்டரில் #ThalaAJITHatRifleChampionship என கொண்டாடும் ரசிகர்கள்

துப்பாக்கி சுடும்போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டதாக வெளியான செய்தியை அவரது ரசிகர்கள் டுவிட்டரில் #ThalaAJITHatRifleChampionship என்ற ஹேஷ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர்.

Samayam Tamil 30 Jul 2019, 2:00 pm
தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் திரைப்படம் மட்டும் அல்லது பல துறைகளில் தனது கால் தடத்தை பதித்து வருகிறார். இவர் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸிங்கில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
Samayam Tamil துப்பாக்கி சுடும் போட்டியில் தல அஜித் ; கொண்டாடும் ரசிகர்கள்


இந்நிலையில் கடந்தாண்டு அஜித் சென்னை கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசகராக இருந்து பறக்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த குழு சர்வதேச அளவில் இரண்டவது இடத்தை பிடித்தது.

இந்நிலையில் தற்போது அவர் அடுத்த துறையாக சமீபத்தில் கோவையில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More: வெளியானது தல அஜித்தின் ஏகே60 படத்தின் முக்கியமான அறிவிப்பு!

ஏற்கனவே இவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும்போது ரசிகர்கள் சிலர் எடுத்த வீடியோ வைரலாக பரவியது.இந்நிலையி்ல இந்த செய்தி வெளியானது.

இந்த செய்து வெளியானதும், அஜித் ரசிகர்களை கையிலேயே பிடிக்கமுடியவில்லை. இந்த செய்தியை வைத்து அஜித்தை கொண்டாட துவங்கிவிட்டனர். இதையடுத்து டுவிட்டரில் #ThalaAJITHatRifleChampionship என்ற ஹேஷ்டேக் வைரலாக பரவி வருகிறது. அதில் வரும் சில டுவிட்களை கீழே காணுங்கள்.

Read More: தல அஜித் பற்றி இந்த நடிகை என்ன சொன்னார் தெரியுமா?

Read More: Thalapathy ரசிகர்கள் செய்த இப்படி ஒரு அசிங்கம்...! உலகளவில் கேவலப்பட்டு போன தமிழ் சினிமா

அடுத்த செய்தி