ஆப்நகரம்

#Comebacksaravanan : பிக்பாஸ் வீட்டில் உண்மை பேச கூடாது...! ஆனால் கெட்ட வார்த்தை பேசலாம் - சரவணனிற்கு டுவிட்டரில் குவியும் ஆதரவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணனை வெளியேற்றியதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மக்கள் #Comebacksaravanan என்ற ஹேஷ்டேக்கில் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Samayam Tamil 6 Aug 2019, 1:16 pm
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் மிக முக்கியமான போட்டியாளராக இருந்தவர் சரவணன். இவர் 90களில் பல படங்களில் ஹீரோவாக நடித்து பின்னர் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர். நடிகர் கார்த்தியின் பருத்திவீரன் திரைப்படத்தின் சித்தப்பு என்ற கதாபாத்திரம் மூலம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
Samayam Tamil சரவணனை வெளியேற்றிய பிக்பாஸ் மீது கோபத்தை கொப்பளிக்கும் மக்கள்


இவர் தற்போது நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்ததில் இருந்து இவர் கொடுத்த ரியாக்ஷன்கள், டைமிங்கில் செய்த காமெடிகள் எல்லாம் மக்களை ரசிக்க வைத்தது.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மீரா, சேரன் இடையே நடந்த ஒரு பிரச்னையில் கமல் பஸ்சில் செல்லும்போது பெண்களை உரசுவது குறித்து பேசினார். அப்பொழுது சரவணன் அதை தானும் செய்திருப்பதாக கைகளை உயர்த்தி கூறினார்.
Read More: கூடவே சுத்திட்டு இருந்த செவ்வாழையை சொல்லாம கொள்ளாம வெளியே அனுப்பிடீங்களே..!

இந்த விஷயம் பெரிய அளவில் விவகாரமானது. அவர் அதை சொல்லும் போது அதை விளையாட்டாகவும். அதை தவறு என உணர்ந்து அவர் சொல்வதாகவும் அது புரிந்துக்கொள்ளப்பட்டாலும். சிலர் இதை பெரிய அளவிற்கு பிரச்னையாக்கினர். இதற்கு அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார்.

இருந்தாலும் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் இந்த பேச்சிற்காக வெளியேறப்பட்டார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருபவர்கள் சரவணனை வெளியேற்றியது பிடிக்காமல் தங்கள் கருத்துக்களை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
Read More : பிக் பாஸ் வீட்டில் அதிர்ச்சி- இப்படியொரு சர்ச்சையால் திடீரென வெளியேற்றப்பட்ட சரவணன்!

இதன் காரணமாக #Comebacksaravanan, #supportsaravanan ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது அந்த ஹேஷ்டேக்கின் கீழ் வரும் பதிவுகளை கீழே காணுங்கள்.

Read More: லோஸ்லியாவை வெறுக்கும் சங்கம் ட்விட்டரில் உதயம்..!


Read More: பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளியாகி வைரலாகும் மீம்களின் கலெக்ஷன்...!


Read More: முகினின் ஒரே குத்தில் உடைந்தது கட்டில்; அழுது புலம்பும் அபி- புதிய கோணத்தில் பிக்பாஸ்..!


Read More: ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷா குறித்து மனம் திறந்த கமல்ஹாசன்

அடுத்த செய்தி