ஆப்நகரம்

BIGIL HD Print நாளை தமிழ்ராக்கர்ஸில் வெளியாகிறதா? - வைரலாகும் டுவிட்

நடிகர் Vijay நடித்த பிகில் திரைப்படம் நாளை தமிழ்ராக்கர்ஸில் வெளியாகவுள்ளதாக டுவிட் ஒன்று வெளியாகியுள்ளது. வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 13 Aug 2019, 5:06 pm
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் பகில். இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Samayam Tamil BIGIL HD Print நாளை தமிழ்ராக்கர்ஸில் வெளியாகிறதா


இந்நிலையில் தற்போது திரைப்படத்திற்கான இறுதிக்கட்டபணிகள் நடந்து வருகிறது. படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்ததாகவே பேசப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டரில் தமிழ்ராக்கர்ஸ் என்ற பெயரில் இருக்கும் ஒரு பக்கம் சமீபத்தில் நாளை தாங்கள் பிகில் படத்தின் எச்டி ரிப் பிரிண்டை வெளியிடப்போவதாக டுவிட் செய்துள்ளது.
Read More: "சல்மான் கான்" குறித்து துப்பு கொடுத்தால் பரிசு...! என்ன துப்பு வேண்டும் தெரியுமா?

இது படதயாரிப்பு, இயக்குநர், நடிகர்கள் தரப்பு மட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இருந்தாலும் இந்த பக்கம் ஒரு போலியான பக்கம் தான் தமிழ்ராக்கர் இணையதளத்தை நடத்தி வருபவர்கள் அவர்களது தளத்தில் தாங்கள் எந்த சமூகவலைதள பக்கத்திலும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

அதனால் இது போலியான பக்கம் தான். அதே நேரத்தில் இந்த பக்கம் தர்பார் படத்தின் எச்டி ரிப் பையும் வெளியிடுவதாக அறிவித்தனர். ஆனால் அது அப்படி எதுவும் நடக்கவில்லை அதனால் இது அவ்வாறான விஷயமாக தான் இருக்கும் என நம்பலாம்
Read More: Kerala Floods -ல் இவங்க பண்ணுற குசும்ப பாத்தீங்களா...! - வைரலாகும் வீடியோ

சிலர் வேண்டுமென்றே தமிழ் ராக்கர்ஸ் பெயரை பயன்படுத்தி இவ்வாறான போலி பக்கங்களை துவங்கி விளையாடி வருகின்றனர். சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த திரைப்படம் வெளியானதையடுத்து அந்த தளத்தை முடக்க அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பிகில் திரைப்படமும் வரும் என வெளியான தகவல் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

Disclaimer: டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (சமயம்) திருட்டுதனமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை என்றுமே ஆதரிக்காது. இது செய்திக்காக மட்டுமே விளம்பரத்திற்கு அல்ல.

அடுத்த செய்தி