ஆப்நகரம்

Bigil: தளபதிக்கு வாழ்த்து சொல்லும் தல ரசிகர்கள் - இந்திய அளவில் டிரெண்டாகும் #HBDvijay_THALAfans

​இன்று மாலை "பிகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் நிலையில் தேசிய அளவில் #HBDvijay_THALAfans என்ற ஹேஷ்டேக்கை தற்போது தேசிய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Samayam Tamil 21 Jun 2019, 7:00 pm
தமிழ் சினிமாவில் இன்று உச்சபட்சமாக இருக்கும் நடிகர்கள் என்றால் அஜித், விஜய் தான். இவர்களுக்குள் சினிமாவிற்குள் போட்டி இருக்கிறது என்றால் இவர்கள் ரசிகர்களுக்குள் உண்மையான போட்டியே நடக்கும். கட் அவுட் வைப்பது, பேனர் வைப்பது, திரைப்படங்களுக்காக செலவு செய்வது என போட்டி நிலவுகிறது.
Samayam Tamil தளபதிக்கு வாழ்த்து சொல்லும் தல ரசிகர்கள் - இந்திய அளவில் டிரெண்டாகும்


இந்நிலையில் நாளை நடிகர் விஜயின் பிறந்தநாள் வருகிறது. இதை கொண்டாட தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் "பிகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்க்கு எதிராக நெக்டிவ் டேக்கை டிரெண்ட் செய்தனர்.

இன்று மாலை "பிகில்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் நிலையில் தேசிய அளவில் #HBDvijay_THALAfans என்ற ஹேஷ்டேக்கை தற்போது தேசிய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதில் சில பதிவுகளை கீழே காணுங்கள்.









அடுத்த செய்தி