ஆப்நகரம்

இளம்பெண்ணுக்கு மாஸ்க் அணிய கற்றுக்கொடுத்த பறவை - வைரல் வீடியோ

மாஸ்க் சரியாக அணியாமல் அருகில் வந்த பெண்மணிக்கு, மாஸ்க் அணிவித்த பறவையின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 15 Sep 2020, 11:56 am
கொரோனா கோவிட் 19 பரவல் காரணமாக உலகம் முழுவதும் வீட்டை விட்டு வெளியேறினால் மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயமாகி வருகிறது. மாஸ்க் அணிவதென்பது நியூ நார்மல் என்று நமது அன்றாட வாழ்வில் ஒன்றி, ஒரு புது அங்கமாகிவிட்டது.
Samayam Tamil இளம்பெண்ணுக்கு மாஸ்க் அணிய கற்றுக்கொடுத்த பறவை - வைரல் வீடியோ


ஆனால், நம்மில் எத்தனை பேர் சரியாக மாஸ்க் அணிகிறோம்? சுவாசிக்க சிரமாக இருக்கிறது, பேச சிரமமாக இருக்கிறது என, பெரும்பாலானவர்கள், மாஸ்கினை கழுத்திற்கு, வாய்க்கும் தான் அணிகிறார்கள்.

மாஸ்க் தவறாக அணியும் நபர்களை நாம் அனுதினம் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். நமக்கு வேண்டியவர்களாக இருந்தால், முறையாக அணியுங்கள் என அறிவுரை கூறி செல்லலாம். மூன்றாவது நபராக இருந்தால், இவங்க எல்லாம் எப்ப தான் திருத்துவங்களோ? என மனதினுள் முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்துவிடுவோம்.

பறவைகள் மனிதர்களை போல இல்லை. ஓர் இளம்பெண் பூங்காவில் பறவை ஒன்றை அருகே சென்று பார்த்து ரசிக்க முயன்றுள்ளார். ஆனால், அச்சமயம் அந்த பெண், மாஸ்கினை கழுத்தில் அணிந்திருந்தார். அப்போது, அந்த பறவை தனது வாயால் அந்த மாஸ்க்கை இழுத்து அப்பெண்ணனின் மூக்கை மூடும்படி மாஸ்க்கை சரிசெய்தது.

ட்விட்டர் வீடியோ:

இந்த வீடியோ 26 மில்லியன் பார்வைகளை கடந்து ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது. மேலும், நெட்டிசன்கள் இதற்கு முறையான கருத்துக்கள் பதிவிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.

அடுத்த செய்தி