ஆப்நகரம்

#NerKondaPaarvaiTrailer உடன் போட்டி போடும் #VIJAYBdayManiaIn10D,#FarmersKAAPPAANOnAug30th ஜெயிக்கப்போவது யார்?

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. டிரைலருக்கு அஜித் பேசும் அனல் பறக்கும் டயலாக்களுக்கு பல நல்ல ரிவியூக்கள் வெளியாகி வருகிறது.

Samayam Tamil 12 Jun 2019, 7:26 pm
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. டிரைலருக்கு அஜித் பேசும் அனல் பறக்கும் டயலாக்களுக்கு பல நல்ல ரிவியூக்கள் வெளியாகி வருகிறது.
Samayam Tamil NerKondaPaarvaiTrailer உடன் போட்டி போடும்  VIJAYBdayManiaIn10D FarmersKAAPPAANOnAug30th  ஜெயிக்கப்போவது யார்


இந்நிலையில் நடிகர் விஜயின் பிறந்தநாள் இன்றும் 10 நாட்களில் வரவிருக்கிறது. அன்று நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித்தின் டிரைலர் வெளியானதால் இன்று காலை முதல் தேசிய அளவில் நடிகர் அஜித்தின் பெயர் டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் விஜயின் ரசிகர்கள் #VIJAYBdayManiaIn10D என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி நேர் கொண்ட பார்வை டிரைலர் ஹேஷ் டேக்கிற்கு போட்டியாக டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போதுஇரண்டு ஹேஷ் டேக்களும் தேசிய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் ரசிகர்களும் நடிகர் அஜித் ரசிகர்களுக்கும் இடையே எதற்கெடுத்தாலும் போட்டி ஏற்படுவது போது இந்த டிரெண்டிங்கிலும் போட்டி நடக்கிறது.

இதில் நடிகர் சூர்யாவின் ரசிர்கர்கள் #FarmersKAAPPAANOnAug30th என்ற ஹேஷ்டேக்கை எடுத்துக்கொண்டு குறுக்கும் மறுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நடிகர் அஜிதின் நேர் கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் இறுதியில் "ஒருத்தர் மீது உள்ள விஸ்வாசத்திற்காக மற்றவரை ஏன் அசிங்கப்படுத்துகிறீர்கள்" என தன் ரசிகரையும் மற்ற ரசிகர்களையும் கண்டித்துள்ளார். இந்த டயலாக் தற்போது வைரலாகியுள்ளது.

அடுத்த செய்தி