ஆப்நகரம்

தண்ணீரை வீணடிக்கும் நபரை தடுத்த நீர்நாய், வீடியோ!

ஒரு நபர் நீரை வீணாக பாய்ச்சி அடித்து வீண் செய்து கொண்டிருந்த போது, தனது கைகளை கொண்டு, நீர் வீணாவதை தடுத்த நீர்நாயின் வீடியோ.

Samayam Tamil 20 Oct 2020, 3:56 pm
மனிதனை காட்டிலும் இயற்கையின் மீதும், இந்த பூமியின் மீதும் அதிக பற்று கொண்டவை ஜீவராசிகள் விலங்குகள் தான். இதை நாம் காலம், காலமாக பார்த்துக் கொண்டே தான் வருகிறோம். ஏன், இந்த ஆண்டு சிறந்த வைல்ட் லைஃப் போட்டோகிராஃபி விருது வென்றது கூற, புலி ஒன்று மரத்தை கட்டிப்பிடித்து கொண்டிருப்பது போன்ற புகைப்படம் தான். Sergey Gorshkov என்பவர் தான் அந்த புகைப்படத்தை எடுத்திருந்தார்.
Samayam Tamil தண்ணீரை வீணடிக்கும் நபரை தடுத்த நீர்நாய், வீடியோ!


சரக்கை காப்பாற்றி, குழந்தையை தவறவிட்ட பெண்மணி, வீடியோ வைரல்!

மேலும், பல சமயங்களில் குடிக்க நீரின்றி விலங்குகள் அலைவதையும், சுற்றுலா பயணிகளிடம் பாட்டில் நீரை கையேந்தி பருகும் விலங்குகளின் காணொளிப்பதிவுகளையும் நாம் கண்டு, பகிர்ந்து வருந்தி இருக்கிறோம்.

ஆகையால் தான் மனிதர்களை காட்டிலும் விலங்குகளுக்கு இயற்கை மீதும், பூமி மீதும் பற்று அதிகம் என்று முன்னரே குறிப்பிட்டிருந்தோம். அதற்கு சாட்சியான மற்றொரு வீடியோ தற்சமயம் இணையத்தில் அதிகமானவர்களால் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் Otter என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நீர்நாய் விலங்கு, டியூப் மூலமாக தண்ணீரை பாய்ச்சி வீணடிக்கும் நபரை தடுத்து நிறுத்தும் காட்சி அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

வீடியோ:


அந்த குட்டி நீர்நாய், அந்த நபர் வேடிக்கையாக நீரை பாய்ச்சும் போதெல்லாம், பதற்றத்துடன் தடுப்பது, நமக்கு நீரின் அவசியத்தை உணர்ச்சுவது போலவே தோன்றுகிறது. இதை பார்த்தாவது இனிமேல், வீடுகளில், அலுவகங்களில், பொது இடங்களில் மக்கள் நீரை வீணடிப்பதை குறைத்துக் கொண்டால் மகிழ்ச்சி.

அடுத்த செய்தி