ஆப்நகரம்

ஜியோவை பார்த்து பயந்து போன வோடஃபோன்!

ஜியோவை பார்த்து பயந்து போன வோடஃபோன்!

Gadgets Now 10 Jan 2017, 11:57 pm
டெல்லி : ரிலையன்ஸ் ஜியோ முகேஷ் அம்பானியால் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தற்போது எங்கும் ஜியோ அலைதான் வீசிவருகிறது. இவர்களின் இலவச 4ஜி டேட்டா மற்றும் அழைப்புகளுக்கான ஆஃபரால் மற்ற நெட்வொர்க்குகள் அனைத்தும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிவருகின்றன. இ்ந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நெட்வொர்க்கான வோடஃபோன் ஜியோவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வோடஃபோன் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil vodafone india looking at potential merger to take on rjio
ஜியோவை பார்த்து பயந்து போன வோடஃபோன்!


அதன்படி வோடஃபோன் இந்தியா நிறுவனமானது வேறு ஒரு இந்திய மொபைல் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைய இருப்பதாக தெரிகிறது. எந்த நிறுவனம் என்று தகவல் வெளியாகவில்லை என்றாலும், ஐடியா அல்லது ஜியோவுடனே இணைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜியோ வருகைக்கு பிறகு இந்தியாவில் மொபைல் நெட்வொர்க்கில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதால் வோடஃபோன் இந்தியா ஜியோ, ஐடியா அல்லது மற்ற நான்கு நெட்வொர்க்குகளுடன் இணைய வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் ஆகியவைபயனாளிகளிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அதனால் தொலைத்தொடர்பு துறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போது ஜியோ நிறுவனம் வருகின்ற மார்ச் 31 வரை இலவசமாக சேவையை வழங்க உள்ளன. அதன் பிறகு கட்டணம் வசூலிக்க தொடங்கியதும் பலரும் ஜியோவை தொடர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வேயில் 1000 பேரில் 500 பேர் ஜியோ உபயோகிக்கின்றனர். மேலும் 75 சதவீதம் பேர் நேரடியாகவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோ ரிலையன்ஸ் ஜியோவை பயன்படுத்துகின்றனர்.

அடுத்த செய்தி