ஆப்நகரம்

பாஜகவுக்கு வாக்கு: மனைவியை விவாகரத்து செய்தார் கணவர்

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மனைவியை முஸ்லிம் கணவர் விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

TOI Contributor 16 Apr 2016, 4:21 pm
அசாம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மனைவியை முஸ்லிம் கணவர் விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
Samayam Tamil votes for bjp in assam muslim man gives talaq to wife
பாஜகவுக்கு வாக்கு: மனைவியை விவாகரத்து செய்தார் கணவர்


அசாம் மாநிலத்தில் கடந்த 11ஆம் தேதியுடன் 2 கட்ட சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள தொனம் அட்டஹதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐனுத்தின். இவரது மனைவி தில்வாரா பேகம். இவர்களது கிராமத்தில் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் வாக்கு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதையும் மீறி, பாஜக கட்சிக்கு தில்வாரா வாக்களித்த விஷயத்தை அவரது மனைவியிடம் இருந்து ஐனுத்தின் தெரிந்து கொண்டார்.

இதனால் கோபமடைந்த ஐனுத்தின் தனது 10 ஆண்டுகால திருமண பந்த்தத்தை முறித்துக் கொண்டு தனது மனைவியை விவகாரத்து செய்தார். அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சனையால்தான் மனைவியை ஐனுத்தின் விவாகரத்து செய்துள்ளார் என்று அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி